Wednesday, December 21, 2022

Epiphany 1

 பிரசன்னத் திருநாளுக்குப் பின்வரும் முதலாம் ஞாயிறு

Epiphany 1

ஆரம்ப வசனம்

அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது. பரி.மத்தேயு 3.17

 

சுருக்க ஜெபம்

எல்லாம் வல்ல கடவுளே, இயேசுவை, அவருடைய ஞானஸ்நானத்தில் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் செய்து, உமது திருக்குமாரன் என்று வெளிப்படுத்தினவரே. ஜலத்தினாலும், ஆவியினாலும் பிறந்த உமது பிள்ளைகளாகிய நாங்கள் எங்கள் வாழ்க்கையை உமது ழியத்திற்கென்று ஒப்புக்கொடுத்து, கடவுளுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவதினால் நாங்கள் மகிழ எங்களை ஏவி எழுப்ப வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக் கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்துவருகிறேன் என்றான். பரி.யோவான் 1.34

No comments:

Post a Comment