பெந்தெகொஸ்தே நாளுக்குப் பின்வரும் 3ம் ஞாயிறு
3rd Sunday
After Pentecost
ஆரம்ப வசனம்
முதல் வருடம்
ஞானஸ்நானத்திலே அவரோடே கூட அடக்கம் பண்ணப்பட்டவர்களாகவும் அதிலே
அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின் மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடே
கூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள். கொலோ. 2.12
இரண்டாம் வருடம்
அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக
வெட்கப்பட்டுப் போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படிக்கு அவரில்
நிலைத்திருங்கள். 1யோவான் 2.28
சுருக்க ஜெபம்
ஆண்டவரும் எங்கள் பிதாவுமாகிய கடவுளே, எங்கள் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய்
நீர் மானிடருக்கு நித்திய ஜீவனை உறுதிப்படுத்தினதுமன்றி, ஞானஸ்நானத்தில்
நீர் எங்களை அவரோடு ஒன்றாகியிருக்கிறீர். பாவத்தின் மரணத்தினின்று எங்களை நீர்
விடுதலையாக்கி, பரிசுத்த ஆவியின் ஒற்றுமையில் உமது அன்பினால்
எங்களைப் புதுவாழ்விற்கு எழுப்பியருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு
கிறிஸ்துவின் கிருபையினால் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்
முதல் வருடம்
நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே மறுஜென்ப முழுக்கினாலும்
பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார். தீத்து 3.5
இரண்டாம் வருடம்
உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லிருக்கிறாரே, அதினாலே நாம் தைரியங்கொண்டு, கர்த்தர் எனக்குச் சகாயர்; நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே. எபிரேயர் 13.5,6
No comments:
Post a Comment