Thursday, December 22, 2022

Ascension Day

கிறிஸ்து பரத்துக்கேறின திருநாள்

Ascension Day

ஆரம்ப வசனம்

வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப் போன தேவ குமாரனாகிய இயேசு என்னும் மகாபிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறார். அல்லேலூயா. எபி.4.14

அல்லது

இயேசு தம்முடைய கைகளை உயர்த்தி அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களை விட்டுப் பிரிந்துபோனார். அல்லேலூயா. பரி.லூக்கா 24.50, 51

 

சுருக்க ஜெபம்

சர்வ வல்லமையுள்ள தேவனே, உமது ஒரே பேறான குமாரனும், எங்கள் கர்த்தருமாகிய இயேசு கிறிஸ்து எழுந்தருளிப் போனதை விசுவாசிக்கிற நாங்கள் இருதயத்தினாலும் மனதினாலும் அவ்விடத்துக்கேறி, அவரோடே இடைவிடாமல் வாசமாயிருக்கும்படி கிருபை செய்ய வேண்டுமென்று ஒரே தேவனாக என்றென்றைக்கும் ஜீவித்து அரசாளுகிற அவரை முன்னிட்டு உம்மை வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைகொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்றார். ஆமென். அல்லேலூயா. 1.11.

No comments:

Post a Comment