அப்போஸ்தலனாகிய பரிசுத்த பேதுருவின் திருநாள் (ஜூன் 29)
St.
Peter the Apostle (29 June)
ஆரம்ப வசனம்
இயேசு பேதுருவை நோக்கி, நானோ
உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக் கொண்டேன். நீ குணப்பட்ட
பின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார். பரி.லூக்கா 22.32
அல்லது
அப்பொழுது அவர், நீங்கள்
என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். பேதுரு பிரதியுத்தரமாக நீர்
தேவனுடைய கிறிஸ்து என்றான். பரி.லூக்கா 9.20
சுருக்க ஜெபம்
சர்வ வல்லமையுள்ள கடவுளே, இயேசவே
கிறிஸ்து என்றும் ஜீவனுள்ள கடவுளாகிய உமது குமாரன் என்றும் அறிக்கை செய்யும்படி
உமது அப்போஸ்தலனாகிய பரிசுத்த பேதுருவை ஏவினீரே, உம்முடைய
திருச்சபை, ஒருமையிலும் சமாதானத்திலும் ஒரே சத்தியத்தைப்
பிரஸ்தாபிக்கவும், உம்முடைய குமாரனும் எங்கள் இரட்சகருமாகிய
இயேசு கிறிஸ்துவாகிய ஒரே ஆண்டவரைப் பின் தொடரவும் அந்தத்
திருச்சபையை அந்த விசுவாசத்தின் கண்மலையின் மேல் கட்டியருள
வேண்டுமென்று உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் இப்பொழுதும் எப்பொழுதும் ஒரே கடவுளாக
ஜீவித்து அரசாளுகிற அந்த இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக் கொள்கிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்
No comments:
Post a Comment