Wednesday, December 21, 2022

Advent 2

 கிறிஸ்து பிறந்த திருநாளுக்கு முன்வரும் 3ம் ஞாயிறு

வருகையின் காலத்தில் 2ம் ஞாயிறு -

Advent 2

ஆரம்ப வசனம்

தேவனுடைய ராஜியம் சமீபமாயிற்று. மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள். பரி.மாற்கு 1.15

 

சுருக்க ஜெபம்

சகல பரிசுத்த வேதவாக்கியங்களையும் எங்களுக்குப் போதனையாக எழுதுவித்த கிருபையுள்ள கர்த்தாவே, எங்கள் இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய்த் தேவரீர் எங்களுக்கு அருளிச்செய்த பாக்கியமுள்ள நித்திய ஜீவ நம்பிக்கையை, உமது பரிசுத்த வசனத்தால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாங்கள் பற்றிக்கொண்டு, எப்பொழுதும் உறுதியாய்க் கைக்கொள்ளும்படி, அந்த வாக்கியங்களை நன்றாய்க் கேட்டு, வாசித்து, கவனித்து, கற்றறிந்து, உட்கொள்ள எங்களுக்குக் கிருபை செய்தருளும். ஆமென். சங்கீதம் 119.103, 104.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள். என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும். உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன். சங்கீதம் 119:103

No comments:

Post a Comment