Thursday, December 22, 2022

Maundy Thursday

கட்டளை வியாழன்

Maundy Thursday

ஆரம்ப வசனம்

நான் உங்களில் அன்பாயிருந்தது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன் என்று இயேசு கூறினார். பரி.யோவான் 13.34

 

சுருக்க ஜெபங்கள்

எல்லாம் வல்ல பரமபிதாவே, உமது திருக்குமாரன் இயேசு கிறிஸ்துவின் பாடுகளின் ஞாபகார்த்தமாய் இந்த ஆச்சரியமான சாக்கிரமெந்தை எங்களுக்கு நீர் அருளினதற்காக உமக்குத் தோத்திரம் செலுத்துகிறோம். அவருடைய திருச்சரீரமும், இரத்தமுமாகிய பரிசுத்த இரகசியங்களைப்பக்தி வினயத்தோடு ஆசரித்து, அவருடைய மீட்பினால் உண்டான கனிகளை நாங்கள் எங்களுக்குள் உணர்ந்து, அவற்றை எங்கள் வாழக்கையில் காட்ட அருள்புரிய வேண்டுமென்று, உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுளாக இப்பொழுதும் எப்பொழுதும் ஜீவித்து அரசாளுகிற அவரை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

என் கண்கள் எப்பொழுதும் கர்த்தரை நோக்கிக் கொண்டிருக்கிறது. அவரே என் கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார். என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும். நான் தனித்தவனும் சிறுமைப்படுகிறவனுமாயிருக்கிறேன். சங்கீதம் 25.15,16

No comments:

Post a Comment