அப்போஸ்தலர்களாகிய பரிசுத்த பிலிப்பு, பரிசுத்த யாக்கோபு ஆகியோரின் திருநாள் (மே 1)
St.
Philip and St. James, Apostles (1 May)
ஆரம்ப வசனம்
நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக அதைச் செய்வேன்
என்று இயேசு சொன்னார். பரி.யோவான் 14.13
சுருக்க ஜெபம்
சர்வ வல்லமையுள்ள கடவுளே, உம்மை
மெய்யாய் அறிந்துகொள்ளுவதே நித்திய ஜீவன். உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை,
வழியும் சத்தியமும் ஜீவனுமாய் அறிவதினால் உமது அப்போஸ்தலர்களாகிய
பரிசுத்த பிலிப்பு, பரிசுத்த யாக்கோபு என்பவர்களுடைய
அடிச்சுவடுகளைப் பின்தொடர்ந்து உமது மகிமைக்கு நடத்துகிற வழியில் உறதியாய் நடக்க
எங்களுக்குப் போதிக்க வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு
வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்
பிலிப்பு அவரை நோக்கி ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும் அது எங்களுக்குப் போதும் என்றான். அதற்கு
இயேசு என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் என்றார். பரி.யோவான் 14.8,9
No comments:
Post a Comment