Thursday, December 22, 2022

Lent 4

 லெந்து காலத்தில் 4ம் ஞாயிறு

(கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளுக்கு முன்வரும் 3ம் ஞாயிறு)

Lent 4

ஆரம்ப வசனம்

இயேசு வெளிப்படும்போது அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்போம். 1 யோவான் 3.2

 

சுருக்க ஜெபம்

எல்லாம் வல்ல பிதாவே, உமது திருக்குமாரன் சிலுவையில் மரணத்தை உத்தரிக்குமுன் அவருடைய மகிமையில் வெளிப்படுத்தப்பட சித்தங் கொண்டீரே, நாங்கள் அவரோடே கூட பாடு அனுபவிக்க பலப்படுத்தப்பட்டவர்களாய் மகிமையின் மேல் மகிமையடைந்து, அவருடைய சாயலில் மறுரூபமாகத்தக்கதாக அவருடைய மகிமையை உணர்ந்து கொள்ள எங்களுக்கு விசுவாசத்தை அருள வேண்டுமென்று உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுளாக இப்பொழுதும் எப்பொழுதும் ஜீவித்து அரசாளுகிற அவரை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள். பரி.மத்தேயு 17.5

No comments:

Post a Comment