Thursday, December 22, 2022

The Sunday after Ascension Day (Easter 6)

கிறிஸ்து பரமேறிய திருநாளுக்குப் பின்வரும் ஞாயிறு

(கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளுக்குப் பின்வரும் 6ம் ஞாயிறு)

The Sunday after Ascension Day (Easter 6)

ஆரம்ப வசனம்

நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கிறீர்கள்? இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப் போனாரோ அப்படியே மறுபடியும் வருவார். அல்லேலுயா. அப்போஸ்தலர் 1.11

அல்லது வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப் போன தேவ குமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறார். அல்லேலூயா. எபி.4.14

 

சுருக்க ஜெபம்

மகிமையின் இராஜாவாகிய தேவனே, உம்முடைய ஏக சுதனாகிய இயேசு கிறிஸ்துவை, மிகுந்த வெற்றிச் சிறப்போடு உமது பரமராஜியத்துக்கு எழுந்தருளச் செய்தீரே. எங்களைத் திக்கற்றவர்களாய் விடாமல், எங்களைத் தேற்றும்படி உம்முடைய பரிசுத்த ஆவியை எங்களிடத்திற்கு அனுப்பி, எங்கள் இரட்சகராகிய கிறிஸ்து முந்திப் போயிருக்கிற அவ்விடத்திற்கே எங்களையும் உயர்த்தி அருளவேண்டுமென்று உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே தேவனாக என்றென்றைக்கும் ஜீவித்து அரசாளுகிற அவரை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

அவர்கள் அவரைப் பணிந்துகொண்டு, மிகுந்த சந்தோஷத்தோடே எருசலேமுக்குத் திரும்பிவந்து, நாடோறும் தேவாலயத்திலே தேவனைப் புகழ்ந்து துதித்துக் கொண்டிருந்தார்கள். ஆமென். பரி.லூக்கா 24.52, 53

No comments:

Post a Comment