பெந்தெகொஸ்தே நாளுக்கப் பின்வரும் 20ம் ஞாயிறு
20th Sunday
After Pentecost
ஆரம்ப வசனம்
நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும் அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும்
இருப்பீர்களாக. 1கொரி.
15.58
சுருக்க ஜெபம்
எல்லாம் வல்ல கடவுளே, உம்முடைய
சன்னிதானத்திற்குப் புதிதும் ஜீவனுமுள்ள வழியை உமது குமாரன் எங்களுக்குத்
திறந்திருக்கிறாரே. ஆவியோடும் உண்மையோடும் நாங்கள் உம்மைத்
தொழுதுகொள்ள தூய மனதையும் திடமான எண்ணத்தையும் எங்களுக்கு அருளிச் செய்தருள
வேண்டுமென்று, அந்த எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்
மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்
நீ மரண பரியந்தம் உண்மையாயிரு. அப்பொழுது ஜீவ கிரீடத்தை உனக்குத்
தருவேன், என்று இயேசு சொன்னார். வெளி. 2.10.
No comments:
Post a Comment