Wednesday, December 21, 2022

Sunday after Christmas Day

 கிறிஸ்து பிறந்த திருநாளுக்குப் பின்வரும் முதலாம் ஞாயிறு

Sunday after Christmas Day

ஆரம்ப வசனம்

தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும் படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. 1யோவான் 4.9

 

சுருக்க ஜெபங்ம்

எல்லாம் வல்ல கடவுளே, ஆச்சரியமான பிரகாரமாக மனிதனை உமது சாயலில் சிருஸ்டித்து, இன்னும் அதிக ஆச்சரியமாய் அவனை உமது திருக்குமாரன் இயேசு கிறிஸ்துவின் மூலம் நீர் திரும்பச் சீர்படுத்தினீர். அவர் எங்கள் மனிதத்தன்மையைத் தரித்துக் கொண்டதுபோல, நாங்களும் அவருடைய தெய்வீகத்தன்மையைத் தரித்துக்கொள்ள கிருபை செய்தருள வேண்டும் என்று உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுளாக இப்பொழுதும் எப்பொழுதும் ஜீவித்து அரசாளுகிற அவரை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

எல்லாம் வல்ல பிதாவே, உமது திருக்குமாரன் இயேசு கிறிஸ்து தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்பட்டு, இஸ்ரவேலுக்கு மகிமையாகவும் எல்லா தேசங்களுக்கும் ஒளியாகவும் புகழ்ந்து போற்றப்பட்டாரே, நாங்கள் அவரில் உமக்குப் பிரதிஷ்டை பண்ணப்படவும், உலகில் உமது மகிமையைப் பிரதிபலிக்கவும் கிருபை செய்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக் கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து சிந்தனை பண்ணினாள்.

இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் தேவகிருபையிலும் மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார். பரி.லூக்கா 2.19, 52

No comments:

Post a Comment