பெந்தெகொஸ்தே நாளுக்குப் பின்வரும் 16ம் ஞாயிறு
16th Sunday
After
ஆரம்ப வசனம்
ராஜா பிரதியுத்திரமாக, மிகவும்
சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ,
அதை எனக்கே செய்தீர்கள் என்று சொல்லுவார். பரி.மத்தேயு 25.40
சுருக்க ஜெபம்
எல்லாம் வல்ல கடவுளே, அன்பே
நியாயப் பிரமாணத்தின் நிறைவேறுதலாய் இருக்கிறது என்று உமது திருக்குமாரன் மூலம்
போதித்து இருக்கிறீரே. நாங்கள் உம்மிடத்தில் முழு இருதயத்தோடு அன்பு கூரவும்
எங்களிடத்தில் அன்பு கூர்வதுபோல பிறரிடத்தில் அன்பு கூரவும் கிருபை செய்தருள
வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம்.
ஆமென்.
பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்
பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்
பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை
நினைக்கவும் வேண்டுமென்று எல்லா விதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றார்.
அப்போஸ்தலர் 20.35
No comments:
Post a Comment