லெந்து காலத்தில் 2ம் ஞாயிறு
(கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளுக்கு முனவரும் 5ம் ஞாயிறு)
Lent
2
ஆரம்ப வசனம்
எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும், மன்னிப்புகளும் உண்டு. என்றபோதிலும் அவருக்கு
விரோதமாக நாங்கள் கலகம் பண்ணினோம். தானியேல் 9.9,10
சுருக்க ஜெபம்
ஆண்டவரே, உலகத்தினாலும்
மாமிசத்தினாலும் பிசாசினாலும் நேரிடும் சோதனைகளுக்கு எதிர்த்து நிற்கவும், சுத்த இருதயத்தோடும் சுத்த மனதோடும் ஒரே தேவனாகிய உம்மைப் பின்பற்றி
நடக்கவும், உம்முடைய ஜனமாகிய எங்களுக்குக் கிருபை தந்தருள
வேண்டுமென்று, எங்கள் ஜனமாகிய எங்களுக்குக் கிருபை தந்தருள
வேண்டுமென்று, எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்
மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்,
பரி.நற்ருனைக்குப் பின்வரும் வசனம்
உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று என் இருதயம் உம்மிடத்தில் சொல்லிற்று. உமது
முகத்தை எனக்கு மறையாதேயும். சங்கீதம் 27.8,9
No comments:
Post a Comment