Thursday, December 22, 2022

12th Sunday After Pentecost

பெந்தெகொஸ்தே நாளுக்குப் பின்வரும் 12ம் ஞாயிறு

12th Sunday After Pentecost

ஆரம்ப வசனம்

கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக் குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சி கொடுத்தார்கள். அவர்களெல்லார் மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது. அப்போஸ்தலர் 4.33.

 

சுருக்க ஜெபம்

எல்லாம் வல்ல கடவுளே, நீர் கிறிஸ்துவின் மானிடரை உம்மோடு ஒப்புரவாக்கினீர் என்பதற்குச் சாட்சியாக உமது திருச்சபையை அழைத்தீரே. உமது அன்பின் நற்செய்தியைக் கேட்கிற யாவரும் உம்மோடும் ஒப்புரவாக அந்த நற்செய்தியைப் பிரஸ்தாபப்படுத்த துணை புரிந்தருள வேண்டுமென்று எங்களுக்காக மரித்து, உயிர்த்தெழுந்த, உம்மோடும், பரிசுத்த ஆவியோடும், இப்பொழுதும் எப்பொழுதும் ஜீவித்து அரசாளுகிற இயேசுகிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள். மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. பரி.மத்தேயு 5.14

No comments:

Post a Comment