கிறிஸ்து பிறந்த திருநாளுக்கு முன்வரும் 2ம் ஞாயிறு
வருகையின் காலத்தில் 3ம் ஞாயிறு -
Advent
3
ஆரம்ப வசனம்
கர்த்தர் வரும்போது இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர்
வெளியரங்கமாக்கி இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார். 1கொரிந்தியர் 4.5
சுருக்க ஜெபம்
சர்வ
வல்லமையுள்ள கடவுளே, உமது குமாரனின் வருகைக்கு உமது
ஜனத்தை ஆயத்தம் பண்ண உமது ஊழியக்காரனாகிய யோவான் ஸ்நானகனை அனுப்பினவரே. உமது
குமாரன் மகிமையோடே திரும்ப வரும்போது எங்கள் நியாயதிபதியாகிய உமது குமாரனுக்கு
முன் நாங்கள் நம்பிக்கையோடே நிற்கத்தக்கதாக கீழப்படியாதவர்களின் இருதயத்தை அன்பின்
பிரமாணத்திற்குத் திரும்பும்படி, உமது பணி விடைக்காரரும்
உக்கிராணக்காரருமானவர்களை ஏவி எழுப்பும்படி உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் இப்பொழுதும்
எப்பொழுதும் ஜீவித்து அரசாளுகிற ஒரே கடவுளாகிய அவரை முன்னிட்டு வேண்டிக்
கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்
மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே வாரும். வெளிப்படுத்தல் 22.20
No comments:
Post a Comment