சகல பரிசுத்தவான்களின் திருநாள் (நவம்பர் 1)
All
Saints' Day (1 November)
ஆரம்ப வசனம்
நமது தேவனுடைய ஊழியக்காரரே, அவருக்குப்
பயப்படுகிற சிறியோரும் பெரியோருமானவர்களே, நீங்கள் யாவரும்
அவரைத் துதியுங்கள். வெளிப்படுத்தின விசேஷம் 19.5
சுருக்க ஜெபம்
சர்வ வல்லமையுள்ள கடவுளே, நீர்
தெரிந்துகொண்டவர்களை உம்முடைய குமாரனின் ஞான சரீரத்தில் ஒரே அன்னியோன்னியமாக
இணைத்திருக்கிறீரே. உண்மையாய் உம்மிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்காகத் தேவரீர்
ஆயத்தம் பண்ணியிருக்கிற சொல்லி முடியாத சந்தோஷங்களை அடையும்படிக்கு நாங்கள்
சன்மார்க்கமும், தேவபக்தி உள்ளவர்களுமாய் நடந்து, ஆசீர்வதிக்கப்பட்ட உம்முடைய பரிசுத்தவான்களைப் பின்தொடரும்படி கிருபை
செய்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு
வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்
அப்பொழுது திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம் போலவும், பலத்த அடிமுழக்கம் போலவும், ஒரு
சத்தமுண்டாகி, அல்லேலூயா’ சர்வ வல்லமையுள்ள தேவனாகிய
கர்த்தர் ராஜியபாரம் பண்ணுகிறார். ஆட்டுக் குட்டியானவரின் கலியாண விருந்துக்கு
அழைக்கப்படடவர்கள் பாக்கியவான்கள், என்றெழுது என்றான். வெளி.
விசேஷம் 19.6,9
No comments:
Post a Comment