பெந்தெகொஸ்தே நாளுக்குப் பின்வரும் 19ம் ஞாயிறு
19th Sunday
After Pentecost
ஆரம்ப வசனம்
நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து
நடக்கிறோம். 2கொரி. 5.6
சுருக்க ஜெபம்
எல்லாம் வல்ல நித்திய கடவுளே, பின்னனவைகளை
மறந்து முன்னானவைகளை நாடி நாங்கள் உமது கற்பனைகளின் வழியாய் ஓடி நித்திய
சந்தோஷத்தின் கிரீடத்தைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக எங்களில் உம்மைப் பற்றும்
விசுவாசத்தின் நல் ஈவுகளைப் பெருகச் செய்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய
இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்
நீங்கள் அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து
சொல்லி முடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க்
களிகூர்ந்தீர்கள். 1பேதுரு 1.8
No comments:
Post a Comment