லெந்து காலத்தில் முதலாம் ஞாயிறு
(கிறிஸ்து உயிர்த்தெழுந்த பண்டிகைக்கு முன்வரும் 6ம் ஞாயிறு)
Lent
1
ஆரம்ப வசனம்
இயேசு வனாந்தரத்திலே நாற்பது நாள் இருந்து சாத்தானால்
சோதிக்கப்பட்டு அங்கே காட்டு மிருகங்களின் நடுவிலே சஞ்சரித்துக் கொண்டிருந்தார்.
தேவ தூதர்கள் அவருக்கு ஊழியஞ் செய்தார்கள். பரி.மாற்கு 1.13
சுருக்க ஜெபம்
எல்லாம் வல்ல கடவுளே, உமது
திருக்குமாரனாகிய இயேசு கிறிஸ்து வனாந்தரத்தில் நாற்பது நாட்களாய் உபவாசித்து,
எங்களைப்போல சோதிக்கப்பட்டும், பாவஞ்செய்யாமல்
இருந்தாரே. உமது ஆவிக்குக் கீழப்படியத் தக்கதாக எங்கள் வாழ்க்கையை நாங்கள்
ஒழுங்குபண்ணி, நீர் எங்கள் பலவீனத்தை அறிவதுபோல, இரட்சிக்கும் உமது வல்லமையை நாங்கள் அறியவும் கிருபை தந்தருள வேண்டும்
என்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக் கொள்ளுகிறோம்.
ஆமென்.
பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்
மனுஷன் அப்பத்தினாலே மாத்திரம் அல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.
பரி.மத்தேயு 4.4
No comments:
Post a Comment