பிரசன்னத் திருநாளுக்கப் பின்வரும் 6ம் ஞாயிறு
Epiphany
6
ஆரம்ப வசனம்
அவர்கள் கேட்டறியும் திராணிக்குத் தக்கதாக அநேக உவமைகளினாலே
அவர்களுக்கு வசனத்தைச் சொன்னார். அவர் தம்முடைய சீஷரோடே தனித்திருக்கும்போது
அவர்களுக்கு எல்லாவற்றையும் விவரித்துச் சொன்னார். பரி.மாற்கு 4.33,34
சுருக்க ஜெபம்
கடவுளே பிசாசினுடைய கிரியைகளை அழிக்கவும், எங்களைக் கடவுளுடைய புத்திரரும் நித்திய ஜீவ
சுதந்தரரும் ஆக்கவும், உமது திருக்குமாரனைப்
பிரசன்னமாகும்படி செய்தீரே. இந்த நம்பிக்கையைக் கொண்டிருக்கிற நாங்கள் அவர்
வல்லமையோடும் மகா மகிமையோடும் மறுபடியும் பிரசன்னமாகும்போது, அவருடைய மகிமையுள்ள நித்திய ராஜ்ஜியத்தில் அவருக்கு ஒப்பானவர்களாகும்
பொருட்டு, அவர் சுத்தமுள்ளவராய்
இருக்கிறதுபோல நாங்களும் எங்களைச் சுத்திகரித்துக் கொள்ளும்படி எங்களுக்குக்
கிருபை செய்ய வேண்டுமென்று, பிதாவாகிய
தேவரீரோடும் பரிசுத்த ஆவியாகிய தேவரீரோடும், ஒரே கடவுளாக
என்றென்றைக்கும் ஜீவித்து அரசாளுகிற அவர் மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்
பரலோக ராஜ்ஜியத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு
அருளப்பட்டது. பரி.மத்தேயு 13.11
No comments:
Post a Comment