கிறிஸ்து பிறந்த திருநாளுக்கு முன்வரும் ஞாயிறு
வருகையின் காலத்தில் 4ம் ஞாயிறு -
Advent
4
ஆரம்ப வசனம்
கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும். மாமிசமான யாவும் அதை ஏகமாய்க்
காணும். ஏசாயா 40.5
சுருக்க ஜெபம்
பரம பிதாவே, எங்கள்
ஆண்டவரும் இரட்சகருமானவரின் தாயாராக கிருபை நிறைந்த பரிசுத்த கன்னி மரியம்மாளைத்
தெரிந்து கொண்டீரே. நாங்கள் உமது பரிசுத்த சித்தத்தை ஏற்றுக்கொள்ளவும், அவ்வம்மையாரோடு உமது இரட்சிப்பில் மகிழவும், உமது
கிருபையினால் எங்களை நிரப்ப வேண்டுமென்று, எங்கள் ஆண்டவராகிய
இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்
பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்
இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு
குமாரனைப் பெறுவாள் அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள். ஏசாயா 7.14
No comments:
Post a Comment