லெந்து காலத்தில் 5ம் ஞாயிறு
(கிறிஸ்து உயிர்தெழுந்த திருநாளுக்கு முன்வரும் 2ம் ஞாயிறு)
Lent
5
ஆரம்ப வசனம்
பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல்
தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி அவர் எல்லாருக்காகவும்
மரித்தார். 2 கொரி.5-15
சுருக்க ஜெபம்
மிகவும் இரக்கம் நிறைந்த கடவுளே, உமது திருக்குமாரன் இயேசு கிறிஸ்துவின் மரணத்தின் மூலமாயும்
உயிர்த்தெழுதலின் மூலமாயும் மானிடரை இரட்சித்து, விடுதலை
பண்ணினீரே, சிலுவையில் பாடு அனுபவித்த அவர் மேலுள்ள
விசுவாசத்தின் மூலமாய் நாங்கள் அவருடைய வெற்றியின் வல்லமையினால் வெற்றிபெற கிருபை
அருள வேண்டும் என்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு
வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்
No comments:
Post a Comment