Thursday, December 22, 2022

Ninth Sunday before Easter

 கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளுக்கு முன்வரும் 9ம் ஞாயிறு

(லெந்து காலத்திற்கு முன்வரும் 3ம் ஞாயிறு)

Ninth Sunday before Easter

ஆரம்ப வசனம்

கர்த்தருடைய வேதம் குறைவற்றதும் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது. கர்த்தருடைய சாட்சி, சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. சங்கீதம் 19.7

 

சுருக்க ஜெபம்

நித்திய கடவுளே, மானிடருக்கு உமது திருக்குமாரனாகிய இயேசு கிறிஸ்து வழியும், சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறாரே. நாங்கள் அவருடைய வழியில் நடக்கவும், அவருடைய சத்தியத்தில் மகிழவும் அவருடைய உயிர்தெழுந்த ஜீவனில் பங்குபெறவும் கிருபை செய்தருள வேண்டும் என்று உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுளாக இப்பொழுதும் எப்பொதும் ஜீவித்து அரசாளுகிற அவரை முன்னிட்டு வேண்டிக் கொள்ளுகிறோம். ஆமென்.

 

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

இயேசு அதிகாரமுடையராய் அவர்களுக்குப் போதித்த படியால், ஜனங்கள் அவருடைய போதகத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள். பரி.மத்தேயு 7.28,29

No comments:

Post a Comment