Thursday, December 22, 2022

Easter 5

கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளுக்குப் பின்வரும் ஐந்தாம் ஞாயிறு

Easter 5

ஆரம்ப வசனம்

கர்த்தர் தம்முடைய தாசனாகிய யாக்கோபை மீட்டுக்கொண்டார் என்று சொல்லுங்கள். கெம்பீர சத்தமாய் பூமியின் கடையாந்தர மட்டும் வெளிப்படுத்துங்கள். அல்லேலூயா. ஏசாயா 48.20

 

சுருக்க ஜெபம்

எல்லாம் வல்ல நித்திய கடவுளே, நாங்கள் ஜெபம் பண்ணும் முன்னே எங்கள் ஜெபத்தைக் கேட்க ஆயத்தமாயிருக்கிறீர். நாங்கள் விரும்புகிறதிலும், பெறத்தக்கதிலும் அதிகமாய்க் கொடுத்துவருகிறீர். எங்கள் மேல் உமது இரக்கத்தைச் சம்பூரணமாய்ப் பொழிந்தருளி, எங்கள் மனச் சாட்சிக்குப் பயமுண்டாக்குகிற குற்றங்களை மன்னித்து, உமது குமாரனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் புண்ணியத்தினாலும், மத்தியஸ்தத்தினாலும் மாத்திரம் கேட்டுக்கொள்ளக் கூடிய நன்மைகளை எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு உலகத்திலே வந்தேன். மறுபடியும் உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகிறேன். என்றார். அல்லேலூயா. பரி.யோவான் 16.28

No comments:

Post a Comment