Thursday, December 22, 2022

Easter Day

கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாள்

Easter Day

ஆரம்ப வசனம்

அதிகாலையில்

வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிறபோது, அவர்கள் கல்லறையினிடத்திற்கு வந்தார்கள். அல்லேலூயா. பரி.மாற்கு 16.2

 

காலையில்

வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையில் சீஷர்கள் கல்லறையினிடத்தில் வந்தார்கள். கல்லறையில் அடைத்திருந்த கல் புரட்டித் தள்ளப் பட்டிருக்கிறதைக் கண்டார்கள். அல்லேலூயா. பரி.லூக்கா 24.1

 

மாலையில்

வாரத்தின் முதல் நாளாகிய அன்றையதினம் சாயங்கால வேளையில் சீஷர்கள் கூடியிருந்த இடத்திலே இயேசு வந்து நடுவே நின்று உங்களுக்குச் சமாதானம் என்றார். அல்லேலூயா பரி.யோவான் 20.19

 

சுருக்க ஜெபங்கள்

சர்வ வல்லமையுள்ள தேவனே, உம்முடைய ஏகசுதனாகிய இயேசு கிறிஸ்துவினால் மரணத்தை ஜெயித்து, நித்திய ஜீவவாசலைத் திறந்தீரே, எங்களுக்கு முன் செல்லும் உமது விசேஷித்த கிருபையினால் தேவரீர் எங்கள் மனதில் நல்விருப்பங்களை உண்டுபண்ணுகிறதுபோல, இடைவிடாமல் துணை நிற்கும் கிருபையினால் அவ்விருப்பங்கள் நற்கிரியைகளாய்ப் பயன்படும்படி கிருபை செய்ய வேண்டுமென்று, உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே தேவனாக என்றென்றைக்கும் ஜீவித்து அரசாளுகிற எங்கள் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய்த் தாழ்மையோடே வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

தேவனே, எங்கள் மீட்புக்கென்று சிலுவையில் மரணமடைய உமது ஒரேபேறான குமாரனைத் தந்தருளி அவருடைய மகிமையான உயிர்த்தெழுதலினால் எங்கள் சத்துருவின் வல்லமையினின்று எங்களை இரட்சித்தருளினீரே, நாங்கள் அவருடைய உயிர்த்தெழுதலில் பங்குள்ளவர்கயாய் எப்பொழுதும் சந்தோஷத்துடன் அவரோடு ஜீவிக்ககத்தக்கதாகத் தினந்தோறும் பாவத்துக்கு மரிக்க எங்களுக்குக் கிருபை செய்தருள வேண்டுமென்று, எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக் கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே, ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம். அல்லேலூயா. 1கொரி. 5.7,8

No comments:

Post a Comment