பெந்தெகொஸ்தே நாளுக்குப் பின்வரும் 7ம் ஞாயிறு
7th Sunday
After Pentecost
ஆரம்ப வசனம்
உத்தமமானவைகளை நீங்கள் ஒபபுக்கொள்ளத்தக்கதாக உங்கள் அன்பானது
அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகவும் நீங்கள்
கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்கவும்
வேண்டுதல் செய்கிறேன். பிலிப்பியர் 1.9-11
சுருக்க ஜெபம்
ஆண்டவரே, அன்பில்லாமல்
நங்கள் செய்கிறவவைகளெல்லாம் பிரயோஜனமில்லாதவைகள் என்று
எங்களுக்குக் கற்பித்திருக்கிறீரே. அன்பில்லாதவன் எவனோ அவன்
உயிரோடிருந்தாலும் செத்தவன் என்று எண்ணப்பட்டிருக்கிறபடியால், உமது பரிசுத்த ஆவியை அனுப்பி, சகல
நல் ஈவுகளிலும் உத்தம ஈவும், சமாதானம் முதலிய சகல
நற்குணங்களையும் இணைக்கிற கச்சையுமாயிருக்கிற அந்த அன்பை உமது ஒரே குமாரனும்
எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் எங்கள் இருதயங்களில்
பொழிந்தருளும். ஆமென்
பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்
நாம் தேவனிடத்தில் அன்பு கூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்பு கூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவர்த்திசெய்கிற கிருபாதார பலியாகத் தம்முடைய குமாரனை
அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. 1 யோவான் 4.10
No comments:
Post a Comment