Thursday, December 22, 2022

St. Mark the Evangelist (25 April)

 சுவிசேஷகனாகிய பரிசுத்த மாற்குவின் திருநாள் (ஏப்ரல் 25)

St. Mark the Evangelist (25 April)

ஆரம்ப வசனம்

நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். பரி.மாற்கு 16.15

அல்லது

பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார். அவர் உங்களுக்குச் சொன்னபடியே அங்கே அவரைக் காண்பீர்கள். பரி.மாற்கு 16.6,7

 

சுருக்க ஜெபம்

சர்வ வல்லமையுள்ள கடவுளே, உமது ஏவுதலினால் உமது சுவிசேஷகனாகிய பரிசுத்த மாற்கு அருளின சாட்சியின் மூலம் உமது பரிசுத்த திருச்சபையை நீர் பிரகாசிப்பித்துள்ளீர். அவருடைய நற்செய்தியின் சத்தியத்தில் நாங்கள் நன்கு வேர் ன்றி, அதனுடைய போதகத்திற்கு வார்த்தையிலும் செயலிலும் உண்மையுள்ளவர்களாய் இருக்க, கிருபை செய்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்று இயேசு சொன்னார். பரி.மத்தேயு 28.30

The Annunciation of our Lord to the blessed Virgin Mary (25 March)

பாக்கியவதியாக பரிசத்த கன்னிமரியாள் மங்களவாக்கத் திருநாள் (மார்ச் 25)

The Annunciation of our Lord to the blessed Virgin Mary (25 March)

ஆரம்ப வசனம்

இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம். பரி.மத்தேயு 1.23, ஏசாயா 7.14

 

சுருக்க ஜெபம்

ஆண்டவரே, உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மனுஷ அவதாரத்தைத் தேவ தூதனுடைய வாக்கினால் அறிந்துகொண்ட நாங்கள் அவருடைய சிலுவையினாலும் பாடுகளினாலும் அவருடைய மகிமையான உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவர்களாகும்படி, எங்கள் இருதங்களில் உம்முடைய கிருபையைப் பொழிந்தருள வேண்டுமென்று, எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

அந்த வார்த்தை மாமிசமாகி நமக்குள்ளே வாசம்பண்ணினார். பரி.யோவான் 1.14

Last Sunday After Pentecost

பெந்தெகொஸ்தே நாளுக்குப் பின்வரும் கடைசி ஞாயிறு

Last Sunday After Pentecost

 

ஆரம்ப வசனம்

அவருடைய வாக்குத்தத்தத்தின் படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகும் என்று காத்திருக்கிறோம். 2பேதுரு 3.13

 

சுருக்க ஜெபம்

இரக்கமுள்ள ஆண்டவரே, உம்மிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு மனோவாக்குக்கு எட்டாத நன்மைகளை ஆயத்தம் பண்ணி இருக்கிறவரே. நாங்கள் எல்லாவற்றிற்கும் அதிகமாய் உம்மிடத்தில் அன்பு கூரவும் நாங்கள் விரும்புகிற எல்லாவற்றிற்கும் மேற்பட்ட உம்முடைய வாக்குத் தத்தங்களைப் பெற்றுக்கொள்ளவும், உம்மைப் பற்றும் அன்பாகிய வரப்பிரசாதத்தை எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் எங்கள் இருதயங்களில் பொழிந்தருளவும் வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

நான் உலகத்தானல்லாதது போல, அவர்களும் உலகத்தாரல்ல என்று இயேசு சொன்னார். பரி.யோவான் 17.16.

22nd Sunday After Pentecost

பெந்தெகொஸ்தே நாளுக்குப் பின்வரும் 22ம் ஞாயிறு

22nd Sunday After Pentecost

ஆரம்ப வசனம்

எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்யக் கூடாது. தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ் செய்ய உங்களாலே கூடாது. பரி.லூக்கா 16.13

 

சுருக்க ஜெபம்

ஆண்டவரே, நாங்கள் நற்கிரியைகளாகிய கனிகளைச் சம்பூரணமாய்க் கொடுத்து உம்மிடத்தில் பலனைச் சம்பூரணமாய்ப் பெறும்படி, நமது ஜனமாகிய எங்கள் மனதை எழுப்பியருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும் வழி நெருக்கமுமாயிருக்கிறது. அதைக் கண்டு பிடிக்கிறவர்கள் சிலர். பரி.மத்தேயு 7.13,14

21st Sunday After Pentecost

பெந்தெகொஸ்தே நாளுக்குப் பின்வரும் 21ம் ஞாயிறு

21st Sunday After Pentecost

ஆரம்ப வசனம்

நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை. வரப்போகிறதையே நாடித் தேடுகிறோம். எபிரெயர் 13.14

 

சுருக்க ஜெபம்

நித்திய பிதாவே, எல்லாவற்றிற்கும் ஆண்டராய் இருந்து எல்லாவற்றையும் அரசாளுவதற்கு உமது திருக்குமாரன் இயேசு கிறிஸ்து பரலோகத்திலுள்ள சிம்மாசனத்திற்கு ஏறினாரே. உமது திருச்சபையை ஆவியின் ஒருமையிலும் சமாதானத்தின் கட்டிலும் காத்து, சிருஷ்டிகள் யாவும் உமது பாதத்தில் ஆராதிக்க அவற்றைக் கொண்டுவரவேண்டும் என்று உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுளாக இப்பொழுதும் எப்பொழுதும் ஜீவித்து அரசாளுகிற இயேசுகிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

நாம் தேவ மகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மை பாராட்டுகிறோம். மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிற படியால் அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது. ரோமர் 5.2,5

20th Sunday After Pentecost

பெந்தெகொஸ்தே நாளுக்கப் பின்வரும் 20ம் ஞாயிறு

20th Sunday After Pentecost

 

ஆரம்ப வசனம்

நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும் அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக. 1கொரி. 15.58

 

சுருக்க ஜெபம்

எல்லாம் வல்ல கடவுளே, உம்முடைய சன்னிதானத்திற்குப் புதிதும் ஜீவனுமுள்ள வழியை உமது குமாரன் எங்களுக்குத் திறந்திருக்கிறாரே. ஆவியோடும் உண்மையோடும் நாங்கள் உம்மைத் தொழுதுகொள்ள தூய மனதையும் திடமான எண்ணத்தையும் எங்களுக்கு அருளிச் செய்தருள வேண்டுமென்று, அந்த எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

நீ மரண பரியந்தம் உண்மையாயிரு. அப்பொழுது ஜீவ கிரீடத்தை உனக்குத் தருவேன், என்று இயேசு சொன்னார். வெளி. 2.10.

19th Sunday After Pentecost

பெந்தெகொஸ்தே நாளுக்குப் பின்வரும் 19ம் ஞாயிறு

19th Sunday After Pentecost

 

ஆரம்ப வசனம்

நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம். 2கொரி. 5.6

 

சுருக்க ஜெபம்

எல்லாம் வல்ல நித்திய கடவுளே, பின்னனவைகளை மறந்து முன்னானவைகளை நாடி நாங்கள் உமது கற்பனைகளின் வழியாய் ஓடி நித்திய சந்தோஷத்தின் கிரீடத்தைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக எங்களில் உம்மைப் பற்றும் விசுவாசத்தின் நல் ஈவுகளைப் பெருகச் செய்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

நீங்கள் அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து சொல்லி முடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்தீர்கள். 1பேதுரு 1.8