Thursday, December 22, 2022

All Saints' Day (1 November)

சகல பரிசுத்தவான்களின் திருநாள் (நவம்பர் 1)

All Saints' Day (1 November)

ஆரம்ப வசனம்

நமது தேவனுடைய ஊழியக்காரரே, அவருக்குப் பயப்படுகிற சிறியோரும் பெரியோருமானவர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள். வெளிப்படுத்தின விசேஷம் 19.5

 

சுருக்க ஜெபம்

சர்வ வல்லமையுள்ள கடவுளே, நீர் தெரிந்துகொண்டவர்களை உம்முடைய குமாரனின் ஞான சரீரத்தில் ஒரே அன்னியோன்னியமாக இணைத்திருக்கிறீரே. உண்மையாய் உம்மிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்காகத் தேவரீர் ஆயத்தம் பண்ணியிருக்கிற சொல்லி முடியாத சந்தோஷங்களை அடையும்படிக்கு நாங்கள் சன்மார்க்கமும், தேவபக்தி உள்ளவர்களுமாய் நடந்து, ஆசீர்வதிக்கப்பட்ட உம்முடைய பரிசுத்தவான்களைப் பின்தொடரும்படி கிருபை செய்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

அப்பொழுது திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம் போலவும், பலத்த அடிமுழக்கம் போலவும், ஒரு சத்தமுண்டாகி, அல்லேலூயா’ சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜியபாரம் பண்ணுகிறார். ஆட்டுக் குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்படடவர்கள் பாக்கியவான்கள், என்றெழுது என்றான். வெளி. விசேஷம் 19.6,9

St. Simon and St. Jude, Apostles (28 October)

அப்போஸ்தலர்களாகிய பரிசுத்த சீமோன், பரிசுத்த யூதா ஆகியோரின் திருநாள் (அக்டோபர் 28)

St. Simon and St. Jude, Apostles (28 October)

ஆரம்ப வசனம்

பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின் மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெயம் பண்ணுங்கள். யூதா 20

 

சுருக்க ஜெபம்

சர்வ வல்லமையுள்ள கடவுளே, இயேசு கிறிஸ்துவையே பிரதான மூலைக்கல்லாக வைத்து, அப்போஸ்தலர்கள் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திவாரத்தின் மேல் உமது திருச்சபையைக் கட்டி இருக்கிறீரே. நாங்கள் உமக்குப் பிரியமான பரிசுத்த ஆலயமாகும்படி அவர்களுடைய உபதேசத்தினால், ஆவியின் ஒருமையில் எங்களை ஒருவரோடு ஒருவராக இணைக்க வேண்டுமென்று எங்கள் ஆண்டரவாகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக, ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான். அவனில் என் பிதா அன்பாயிருப்பார். நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம் பண்ணுவோம் என்று சொன்னார். பரி.யோவான் 14.23

St. Luke the Evangelist (18 October)

சுவிசேஷகனாகிய பரிசுத்த லூக்காவின் திருநாள் (அக்டோபர் 18)

St. Luke the Evangelist (18 October)

 

ஆரம்ப வசனம்

இயேசுவானவர் எடுத்துக் கொள்ளப்பட்ட நாள் வரைக்கும் செய்யவும் உபதேசிக்கவும் தொடங்கின எல்லாவற்றையும் குறித்து முதலாம் பிரபந்தத்தை லூக்கா உண்டு பண்ணினார். அப்போஸ்தலர் 1.2

 

சுருக்க ஜெபம்

சர்வ வல்லமையுள்ள கடவுளே, உமது குமாரனின் அன்பையும் குணமாக்கும் வல்லமையையும் பிரசித்தப்படுத்த வைத்தியனாகிய பரிசுத்தமாக்கும் வல்லமையையும் பிரசித்தப்படுத்த வைத்தியனாகிய பரிசுத்த லூக்காவை ஏவினீரே. ஆவியின் கிருபையினாலும், நற்செய்தியாகிய மருந்தின் மூலமாகவும் குணமாக்கும் அந்த அன்பையும் வல்லமையையும் உமது திருச்சபைக்காகத் தந்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி, உன் தேவன் ராஜரீகம் பண்ணுகிறாரென்று, சீயோனக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின் மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன. ஏசாயா 52.7

St. Michael and all Angels (29 September)

பரிசுத்த மிகாவேல் முதலான சகல தேவதூதர்களின் திருநாள்

St. Michael and all Angels (29 September)

ஆரம்ப வசனம்

கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு, அவருடைய வசனத்தின்படி செய்கிற பலத்த சவுரியவான்களாகிய அவருடைய தூதர்களே, அவரை ஸ்தோத்திரியுங்கள். சங்கீதம் 103.20

 

சுருக்க ஜெபம்

நித்திய ஆண்டவராகிய கடவுளே, தேவதூதரும் மனிதரும் செய்யும் பணிவிடைகளை அதிசயமான பிரகாரமாய் ஏற்படுத்தினவரே. உமது பரிசுத்த தூதர்கள் பரலோகத்தில் எப்பொழுதும் உம்மைச் சேவிப்பது போல, உமது கட்டளையின்படி அவர்கள் பூலோகத்திலும் எங்களை ஆதரித்துக் காப்பாற்றும்படி கிருபை செய்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக்கொள்ளகிறோம். ஆமென்.

 

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

உம்மை என் முழு இருதயத்தோடு துதிப்பேன். தேவர்களுக்கு முன்பாக உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன். சங்கீதம் 138.1

St. Matthew the Apostle (21 September)

அப்போஸ்தலனாகிய பரிசுத்த மத்தேயுவின் திருநாள் (செப்டம்பர் 21)

St. Matthew the Apostle (21 September)

ஆரம்ப வசனம்

ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனுஷனைக் கண்டு, எனக்குப்பின் சென்றுவா என்றார். பரி.மத்தேயு 9.9

 

சுருக்க ஜெபம்

சர்வ வல்மையுள்ள கடவுளே, பரிசுத்த மத்தேயு சுயநலமான ஆதாயத்தைப் பின்பற்றுவதை விட்டுவிட்டு ஒரு அப்போஸ்தலனாகவும் சுவிசேஷகனாகவும் ஆகும்படி உமது குமாரன் இயேசு கிறிஸ்துவின் மூலம் அழைத்தீரே, நாங்கள் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்தொடரும்படி, எங்களை எல்லா பற்றுகளிலும் பண ஆசையிலும் இருந்து பிரித்தருள வேண்டுமென்று, உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுளாக இப்பொழுதும் எப்பொழுதும் ஜீவித்து அரசாளுகிற அவரை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

பின்பு அவர் வீட்டிலே போஜன பந்தியிருக்கையில், அநேக ஆயக்காரருரும் பாவிகளும் வந்து, இயேசுவோடு பந்தியிருந்தார்கள். இயேசு பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார். பரி.மத்தேயு 9.10,12,13

The Blessed Virgin Mary (8 September)

பாக்கியவதியா கன்னிமரியாளின் திருநாள் (செப்டம்பர் 8)

The Blessed Virgin Mary (8 September)

 

ஆரம்ப வசனம்

விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப் பட்டவைகள் நிறைவேறும் என்றாள். பரி.லூக்கா 1.45

அல்லது

அதற்கு மரியாள், இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றான். பரி.லூக்கா 1.38

 

சுருக்க ஜெபம்

சர்வ வல்லமையுள்ள கடவுளே, பாக்கியவதியாகிய கன்னி மரியாள் அவர்களை, உமது ஒரே குமாரனின் தாயாராகத் தெரிந்து கொண்டவரே, உமது ஒரே குமாரனின் இரத்ததினால் மீட்கப்பட்ட நாங்கள் அப்பாக்கியவதியோடு உமது நித்திய இராஜ்ஜியத்தின் மகிமையில் பங்கு பெற கிருபை செய்தருள வேண்டுமென்று உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுளாக இப்பொழுதும் எப்பொழுதும் ஜீவித்து அரசாளுகிற எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார். பரி.லூக்கா 11.28

அல்லது

மரியாளோ அந்தச் சங்கதிகளை யெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனை பண்ணினாள். பரி.லூக்கா .19

St. Bartholomew the Apostle (24 August)

அப்போஸ்தலனாகிய பரிசுத்த பர்த்தொலொமேயுவின் திருநாள் (ஆகஸ்டு 24)

St. Bartholomew the Apostle (24 August)

ஆரம்ப வசனம்

நாளுக்கு நாள் அவருடைய இரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள். ஜாதிகளுக்குள் அவருடைய மகிமையைம் விவரித்துச் சொல்லுங்கள். சங்கீதம் 96.2,3

 

சுருக்க ஜெபம்

சர்வ வல்லமையுள்ள கடவுளே, உமது வசனத்தை உண்மையாய் விசுவாசிக்வும் பிரசங்கிக்கவும் உம்முடைய அப்போஸ்தலனாகிய பரிசுத்த பர்த்தொலொமேயுவுக்குக் கிருபை அளித்தீரே. அவர் நேசித்த அந்த உமது வசனத்தை உமது திருச்சபை நேசிக்கவும், அதை உண்மையென்ற எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

ஆகையால், என் பிதா எனக்கு ஒரு ராஜியத்தை ஏற்படுத்தினது போல, நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன். நீங்கள் என் ராஜியத்திலே என் பந்தியில் போஜன பானம் பண்ணுவீர்கள் என்று இயேசு சொன்னார். பரி.லூக்கா 22.29, 30